Search This Blog

Sunday 5 February 2017

நீட் தேர்வும், மாணவர்களின் மருத்துவ கனவும்



   முன்பு ஒரு காலத்தில் மருத்துவர்களும், பொறியாளர்களும் மக்களின் முன்பு மரியாதைக்குரிய பட்டம் பெற்றவர்களாக கருதப்பட்டனர். காலப்போக்கில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக வேலை இல்லாத பொறியியல் பட்டதாரிகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போது மருத்துவ படிப்பு மட்டுமே பெரிய பட்டமாக கருதப்படுகிறது.

    இது நாள் வரை உயர்நிலை கல்வியில் பெற்ற  மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை அதிக பணம் செலுத்தி படிக்கவைக்கின்றனர். இது இரண்டும் தவறான வழிமுறை ஆகும். நன்றாக படிப்பவன் திறமைசாலி ஆக முடியாது, மதிப்பெண்னுக்காக மட்டும் மனப்பாடம் செய்து படிப்பதால் புரிந்து கொள்ளும் திறன் குறைவாகவே இருக்கும். 

          கல்லூரியில் சென்றும் அதே பழக்கம் தொடர்ந்தால் நிச்சயமாக தகுதி படைத்த ஒரு மருத்துவனாக வெளியில் வர முடியாது. அதிக பணம் வசூலிப்பதால் பணக்காரர்கள் மட்டுமே தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க முடியும். ஏழைகளுக்கும் திறமையானவர்களுக்கும் மருத்துவப் படிப்பு என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

  இது இரண்டு முறையிலும் மாற்றம் கொண்டு வந்து தகுதியானவர்களை கண்டறிய நுழைவுத் தெர்வு  வைப்பது அவசியம். மருத்துவ நுழைவுத்தேர்வை அரசு நடத்தி தகுதியான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவப்படிப்பு வழங்குவது பாரட்டக்கூடிய ஒரு விடயம்.
          
        அனால் தற்போது அரசு அறிவித்து இருக்கும் நீட் தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தின் படியே அமைத்திருக்கும். இதனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தகுதி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏ.கா: ஐஐடி நுழைவுத்தேர்வில் அவர்கள் மட்டுமே 95% தேர்ச்சி பெறுகின்றனர்.

        மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெறுவது கடினம் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள அதிகமான குறை. எனவே அவர்கள் வெளியில் நீட் பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். அங்கும் அதிகமாக பணம் வசூலிப்பதால் பணக்காரர்கள் மட்டுமே அங்கும் பயில முடியும். ஏழை மாணவர்களால் நீட் தேர்வை சமாளிக்க முடியாது.


இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர சில தீர்வுகள்:


1. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை ( அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியை பாதிக்காமல்)

2. மருத்துவ நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்துதல் .

3. பயிற்சி மையங்களை பள்ளிகளையே ஏற்படுத்தி தனியார் பயிற்சி மையங்களை ஒழித்தல் .

4. பள்ளியில் பயிலும் போதே மாணவர்களின் திறனுக்கேற்ப மருத்துவமோ, பொறியியலோ கற்பித்து கொடுத்து ஆர்வத்தை தூண்டுதல்.

5. தமிழக அரசின் பாடத்திட்ட முறையை மாற்றுதல்.

6. தூய தமிழிலேயே வார்த்தைகளை படிப்பதால்  ஆங்கிலத்தில் பார்க்கும்போது திறமையான மாணவராக இருந்தாலும் குழம்பிவிடுகின்றனர். எனவே பாடப்புத்தகத்தில் சில வார்தைகளை ஆங்கிலத்திலேயே படிக்க வைத்தல். எடுத்துக்காட்டாக சிரை, தமனி என்பதனை வெய்ன், ஆரெட்டரி என்று.

7. இதே வழிமுறைகளை பொறியியலுக்கும் எடுத்தால் திறமையான எதிகாலத்தை நிச்சயமா உருவாக்கலாம்.

  இந்த ஆண்டு நடக்கப்போகும் நீட் தேர்வின் மூலமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களால் தேர்ச்சி பெற முடியாது. இதனால் அதிக இலாபம் பெறப்போவது தனியார் பயிற்சி மையங்கள் மட்டுமே. இதை கருத்தில் கொண்டு மாணவர்களில் எதிர்காலம் கருதி அரசு இந்த ஆண்டு நீட் தெர்வை ரத்து  செய்து அடுத்த ஆண்டு முதல் சில சிர்திருத்தங்களுடன் அனைவருக்கும் மருத்துவ படிப்பு கிடைக்கும் வண்ணம் திட்டம் வகுக்கவேண்டும்.